உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெள்ளிக் இரவு ஹிஜ்ரி 1446 ரபீஉனிஸ் ஸானி மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை.
அவ்வகையில், ஹிஜ்ரி 1446 ரபீஉனில் அவ்வல் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2024 ஒக்டோபர் 05ஆம் திகதி ஹிஜ்ரி 1446 ரபீஉனிஸ் ஸானி மாதத்தின் 01ஆம் பிறை என கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA) ஆகியன ஏகமனதாக அறிவிக்கின்றன.