இலங்கை – இஸ்ரேல் விமான சேவைகள் இரத்து!

Date:

ஈரான் தாக்குதல்களால் டெல் அவிவ் விமான நிலையத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முந்திய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையில் விமான சேவைகளை திட்டமிட்டுள்ளவர்கள் உரிய திகதிகளை மாற்றியமைக்குமாறு தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையர்களும் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏதேனும் அபாயகரமான சூழ்நிலை ஏற்படின் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தூதரகம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் போர் அச்சம் காரணமாக, இஸ்ரேலுக்குச் செல்ல எவரேனும் தயாராக இருந்தால் அந்த வெளிநாட்டு பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...