வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு!

Date:

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது.

இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

நேற்றைய நிலவரப்படி 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்களுக்கான செலவீன வரம்பு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...