ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரம்: கனடாவின் மோசமான குற்றச்சாட்டை மறுத்தது இந்தியா

Date:

கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர்  ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்தது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருகிறார் என இந்தியா, இன்று கனடா அரசுக்கு பதிலடி தந்துள்ளது.

ஜூன் 2023ல் காலிஸ்தான் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர்ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் காட்டி இருந்தார்.அப்போது முதல் இந்தியா கனடாவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விரிசல் தொடர்ந்து வரும் இந்தவேளையில், இந்தியா உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா மீது மோசமான குற்றச்சாட்டுகளை கனடா தெரிவித்துள்ளது. கனடாவின் இந்த குற்றச்சாட்டை அபத்தமானது என இந்தியா நிராகரித்துள்ளது.

இந்திய உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா, பலதுறைகளில் பணியாற்றி, நீண்ட அனுபவம் கொண்ட மூத்த முக்கியமான அதிகாரி ஆவார்.

ஜப்பான், சூடான், இத்தாலி, துருக்கி, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவின் சிறப்பு துாதராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர்.அரசுத் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

சமீபத்தில லாவோஸ் நாட்டிற்கு ஆசியான் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போதுகூட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரு தரப்பு உறவு குறித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில் கனடா எங்களது அதிகாரிகளை ஆதாரம் இல்லாமல் கேவலப்படுத்துவதாகவும், தனது மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தத் தவறியதை நியாயப்படுத்த மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...