பாரம்பரிய அரபு எழுத்தணிக் கலையை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? விண்ணப்பியுங்கள்..!

Date:

முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக் கலையை ஊக்குவிக்கும் முகமாக இரண்டு நாள் அரபு எழுத்தணி பயிற்சி வகுப்புகள் இரத்மலானையில் எதிர்வரும் 26-27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

அரபு எழுத்தணிக் கலையில் ஆர்வமுள்ள கொழும்பு மற்றும் அண்மித்த அரபு கல்லூரி ஆண் மாணவர்கள் இப்பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.

இலங்கை அரபு எழுத்தணி கலைச் சங்கம்   ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்பயிற்சி நிகழ்வில் வளவாளர்களாக Ash Shaikh Junaid Naseer Naleemi  (SLTS, BA, Dip in Edu, M.Ed), Al Alim S. Majeem Yousufi (India), Lecturer Dharul Uloom Al-Hashimiyyah Arabic College, Nawalapitiya, Al Aalim Al Faazil N.M. Silmy (Noori, Saahdhi) Usthaz Rawlathul Jannah Arabic College (Muthur), Ash Shaikh Moosa Kaleem Naleemi (SLTS, BA, Dip in Edu, M.Ed) கலந்துகொள்வர்.

இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள்;
*உங்கள் பெயர்
*கல்வி கற்கும் தரம்
 *கற்கும் அறபுக் கல்லூரியின் பெயர்
 *உங்கள் சுய முகவரி

ஆகியவற்றை 0778852767 எனும் what’s app இலக்கத்திற்கு 04/10/2024 ஆம் திகதிக்கு முன் அனுப்புமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் சேவைக் கட்டணம்: 1000/-அறவிடப்படுவதுடன் தங்குமிட வசதி செய்து தரப்பட மாட்டாது என்பதுடன் பங்கு பற்றுவோர் தமது மத்ரசாவிலிருந்து அல்லது வீட்டில் இருந்து வந்து போக வேண்டும் எனவும் ஏற்பாட்டாளர்கள்  தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...