எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது,
மாவட்டச் செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் பொலிஸ் பிரிவின் ஏனைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
மேலும், அரச அலுவலகங்கள் மற்றும் இராணுவ முகாம்களில் பணிபுரிபவர்கள் நவம்பர் 1 மற்றும் நவம்பர் 4 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
இதேவேளை, தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களும் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 8 ஆகிய இரு திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.