எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது பாராளுமன்றத் தேர்தல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்ற அமைப்புக்களில் பழமைவாய்ந்த அமைப்பான பெப்ரல் அமைப்பு, பொதுத்தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கான பணிகளை மும்முரமாக ஏற்பாடு செய்து வருகின்றது.
அந்தவைகயில் நாளை முதல் ஆரம்பிக்கப்படுகின்ற தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதிலிருந்து பொதுத்தேர்தலுடைய அனைத்து தேர்தல் விவகாரங்களையும் கண்காணிக்கும் வகையிலான ஏற்பாடுகளை பூர்த்தி செய்து அதற்கான தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்கின்ற பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகின்றது.
அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள நாத்தாண்டி,வென்னப்புவ, ஆனமடுவ,சிலாபம், புத்தளம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கான கண்காணிப்பாளர்களை நியமனம் செய்து அவர்களுக்கான தேர்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்கும் நிகழ்வு இன்று புத்தளம் நகரில் நடைபெற்றது.
வளவாளராக சட்டத்தரணி தினேஷ் பெரேரா கலந்துகொண்டு தேவையான வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் வழங்கினார்.
பெப்ரல் அமைப்பின் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயற்படுகின்ற ஏ.ஸீ.எம்.ருமைஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பெப்ரல் அமைப்பின் கள உத்தியோகத்தர் தரிந்து ஹேரத்தும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடாத்தினார்.