எல்பிட்டிய தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி

Date:

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் 1 சுயேட்சை குழு போட்டியிட்டன.

தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

7 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை வென்றுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை வென்றது.

அத்துடன், பொதுமக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சுயேட்சை குழு 2,568 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி 1,350 வாக்குகளை பெற்று, ஒரு ஆசனத்தை வென்றது.

தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...