MFCD நிறுவனம் இலங்கையில் ஸ்பயர் நியமங்கள் தொடர்பான Core Humanitarian Standard (CHS) புத்தகத்தின் சிங்கள பதிப்பினை செப்டம்பர் 25ஆம் திகதி கொழும்பு பொது நூலகத்தில் வெளியிட்டு வைத்தது.
களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஷகிப் மொஹமட் அவர்கள் நூலின் சிங்களப் பதிப்பை பார்வையாளர்களுக்கு முன்வைத்ததுடன் MFCD
நிறுவனத்தின் தலைவர் ஹனான் ஹுசைன் அறிமுகத்தை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கொலன்னாவ பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் கொலன்னாவ மற்றும் களுத்துறை சன சமூக அமைப்புக்களின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்கு முன்னர் ‘அடிப்படை மனிதாபிமான நியமங்கள்’ என்ற தலைப்பில் பயிலரங்கு நடைபெற்றது. MFCD நிறுவனம் இலங்கையில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளின் போது அவர்களின் கண்ணியத்தை உறுதி செய்வதற்கான தரத்தை மேம்படுத்துவதற்கான நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மனிதாபிமான செயற்பாடுகளின் போது பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூகங்களுடன் நெருக்கமாக பணியாற்றும் பணியாளர்களுக்கான பயிற்சியாக இந்த செலமர்வு அமைந்திருந்தது. நிகழ்வின் முடிவில் பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
களனி பல்கலைக்கழக விரிவுரையாளரும் மனிதாபிமான செயற்பாட்டாளருமான எஸ்.என். ஷகிப் மொஹமட், கொலன்னாவ மஸ்ஜித் சம்மேளனத்தின் செயலாளர் துவான் ஜுஹைர் சுவ சக்தி அமைப்பின் தலைவர் திருமதி நசிரா ரிஸ்வி பிரதம நிறைவேற்று அதிகாரி ஹஸ் ரீம் இஸ்மாயில், இஸாம் மொஹமட் ஆகியோர் வளவாளர்களாக இந்த பயிற்சிசெறநெறிப்படுத்தினார்.