இலங்கைக்கு பயணத் தடை விதிக்கவில்லை: அமெரிக்கத் தூதுவர் விளக்கம்

Date:

இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தெளிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்தார்

அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்

அறுகம்பை பகுதியில் குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காணப்படுவதாக தகவல் கிடைத்த சந்தர்ப்பத்தில், அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்தோம்.

அத்துடன் தொடர்ச்சியாக அன்றாடம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தலைமைத்துவத்துடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.

எவ்வாறெனினும், இலங்கைக்கான பயண ஆலோசனை தொடர்பான சில பிழையான தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை தெளிவுபடுத்த வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும் மறு அறிவிப்பு வரும் வரை அறுகம்பேக்கு பகுதிக்கு பயணிக்க வேண்டாம் அண்மையில் அறிவித்திருந்தோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஸ்திரதன்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...