இஸ்ரேல் மீண்டும் மீண்டும் அதிரடி தாக்குதல்: ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக கருதப்பட்டவர் பலி?

Date:

ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவராக கருதப்பட்ட ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹிஸ்புல்லா தலைவராக இருந்த நஸ்ருல்லா ஏற்கனவெ இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக ஆவார் என கருதப்பட்ட ஹசீம் சபிதீனை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஹசீம் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலுக்கு பின் ஹசீம் சபிதீன் இருப்பிடமோ? அவரது நிலை குறித்தோ இதுவரை ஹிஸ்புல்லா எந்த தகவலும் வெளியிடவில்லை. இதன் மூலம் வான்வழி வான்வழி தாக்குதலில் ஹசீம் சபிதீன் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய நபர்களை இஸ்ரேல் வீழ்த்தி வருகிறது.

இது இஸ்ரேல் – ஹிஸ்புல்லா மோதலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தரைவழியாகவும் லெபனானுக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதலில் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

‘என் சகோதரியை எண்ணிப் பெருமைப்படுகிறேன்’ அயர்லாந்து அதிபரின் சகோதரி சிறைபிடிப்பு: காசா உதவிக் கப்பலை மறித்த இஸ்ரேல்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற...

எச்.ஐ.வி, சிபிலிஸ் ஒழிப்பில் வரலாற்றுச் சாதனை: இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு விசேட பாராட்டுச் சான்றிதழ்!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறைக்கு சர்வதேச மட்டத்திலான வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம்...

பௌத்தாலோக வெசாக் வலயம் மே 30 ஆரம்பம்

பௌத்தாலோக வெசாக் வலயம் எதிர்வரும் 30ம் திகதி முதல் ஜூன் மாதம்...