காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இம்மாதம்14 மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கமைய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தகுதிபெற்ற தபால் மூல வாக்காளர்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வாக்களிக்க முடியும் என்பதுடன், குறித்த திகதியில் தமது தபால் மூல வாக்கை அளிக்க முடியாவிடின் எதிர்வரும் 18ஆம் திகதி தேர்தல் அலுவலகத்தில் வாக்கை அளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.