ஒக்டோபர் 27 – காஷ்மீரில் இந்திய அடக்குமுறையை நினைவு கூறும் திகதி
காஷ்மீர் நெருக்கடி என்பது வரலாற்று, அரசியல் மற்றும் மூலோபாய சிக்கல்களைக் கொண்ட உலகின் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் பிரச்சினையாகும்.
ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசாங்கம் மறுத்து வருகிறது, இதன் விளைவாக அம்மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
1947 முதல் 1989, 1989 முதல் 2019 மற்றும் 2019 வரை என இப்பிரச்சினையை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்: ஒவ்வொரு கட்டமும் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் காஷ்மீர் மக்களின் சுய ஆட்சி தொடர்பான வாக்கெடுப்புக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முன்மொழிவுகளை நிராகரித்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை கொண்டவையாகும்.
இவை காஷ்மீர் மீதான இந்தியாவின் அடக்குமுறையை படிப்படியாக வலுப்படுத்தியதையும், காஷ்மீர் மக்களின் அரசியல் சுயாட்சி மற்றும் அடிப்படை உரிமைகளை நசுக்குவதையுமே பிரதிபலித்தன.
1947 முதல் 1989 வரையான முதல் கட்டத்தில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின் கீழ் வாக்குறுதியளிக்கப்பட்ட வாக்கெடுப்பு நடைபெறும் என காஷ்மீர் மக்கள் பொறுமையாக காத்திருந்தனர்.
1947 ஒக்டோபர் மாதம முதல் இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் ஸ்ரீநகர் வந்திறங்கி, அந்த அழகிய பிரதேசத்தின் செழுமையை நாசமாக்க ஆரம்பித்தனர்.
இந்த நிகழ்வு காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதை அடையாளப்படுத்தியது அத்துடன் பல தசாப்தங்களாக மோதல்கள் மற்றும் எதிர்ப்புகளுக்கும் அது வழிவகுத்தது.
ஒக்டோபர் 27 திகதி மனித உரிமை மீறல்கள், அரசியல் துரோகங்கள் மற்றும் காஷ்மீரிகளின் சுதந்திரத்திற்காக அவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தை நினைவுகூருகிறது.
பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதன் பிறகு ஏற்பட்ட குழப்ப நிலையில் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சிற்றரசு சமஸ்தானங்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதற்கான தெரிவு அங்குள்ள மக்களுக்கு வழங்கப்பட்டது.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை அப்போது ஆண்ட இந்து ஆட்சியாளர் மகாராஜா ஹரிசிங், காஷ்மீரின் பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்புகளை இந்தியாவிடம் ஒப்படைத்து, 26 அக்டோபர் 1947 அன்று ஒரு கபடத்தகமான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
இது காஷ்மீர் மக்களைக் கலந்தாலோசிக்காமலேயே அவரால் எடுக்கப்பட்டது. பின்னர், காஷ்மீரின் எதிர்காலம் பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படும் என்றும், காஷ்மீர் மக்களுக்கு இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதற்கான தெரிவு வழங்கப்படும் என்றும் இந்தியா உறுதியளித்தது.
ஆனால் அவ்வாக்குறுதி ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையும் மறுக்கப்பட்டது.
அதன் பின், இந்தியா தனது இராணுவத் தலையீட்டை சட்டப்பூர்வமாக்குவதற்கான ஒரு தந்திரமாக காஷ்மீர் பிரச்சினையை 1948 இல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது.
அதைத்தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் காஷ்மீர் விடயத்தில் பல தீர்மானங்களை நிறைவேற்றியது, அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது 47 ஆம் தீர்மானம் ஆகும்.
இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை வலியுறுத்தி காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பொன்றை நடாத்துமாறு கூறியது. அதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு இந்தியா பாகிஸ்தான் இரு நாட்களில் எதனுடன் இணைய விருப்பம் என்பதை அறிவது நோக்கமாகும்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் மூலம் பரிந்துரைக்கப்படட வாக்கெடுப்பை இந்தியா நடத்தவில்லை.
காலப்போக்கில், ஜம்மு காஷ்மீர் மீது இந்தியா தனது கட்டுப்பாட்டை பலப்படுத்தவும் செய்தது. அத்துடன், காஷ்மீரிகளின் அரசியல் உரிமைகளும் படிப்படியாக பலவீகப்படுத்தப்பட்டதுர்.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு சுயாட்சியை வழங்கியிருந்த இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு ஒரு தற்காலிக நடவடிக்கையாக பயன்படுத்தப்பட்டது, ஆனால் இந்தியா இந்த சுயாட்சியின் அம்சங்களை படிப்படியாக குறைத்தது.
ஐநா தீர்மானங்களை இந்தியா செயல்படுத்தத் தவறியதை கடந்த தசாப்தங்களில் அங்கு அரசியல் அமைதியின்மை, ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் ஏற்படவும் காஷ்மீரில் இந்தியாவின் மிருகத்தனமான இராணுவ அடக்குமுறைக்கும் வழிவகுத்தது.
இதே ஒக்டோபரில் தான் ஜம்மு காஷ்மீரை இந்தியா கைப்பற்றியது, அதைத் தொடர்ந்து ஜம்மு பகுதியில் முஸ்லிம்கள் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டனர். மவேட் உதம்பூர், செனானி, ஆர்நகர், படேர்வா, ரீசி, அக்னு மற்றும் கதுஹா ஆகிய மாவட்டங்களில் முஸ்லிம்கள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் கொடூரமாக கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கப்பட்டனர் மற்றும் கடத்தப்பட்டனர். சமூகங்கள் இடம்பெயர்ந்தனர்.
இந்த வகையில், இதுவரை இந்திய இராணுவத்தினர்களால் கிட்டத்தட்ட மூன்று லட்சம் உயிர்கள் கொல்லப்பட்டுள்ளன. உயிர் பிழைத்த ஆயிரக்கணக்கானோர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடினர்
1947 ஒக்டோபர் 27 அன்று, இந்திய ஆக்கிரமிப்புப் படைகள் ஸ்ரீநகருக்குள் நுழைந்ததிலிருந்து, காஷ்மீர் மக்கள் பல தசாப்தங்களாக அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர்.
பின்னர் 1990 களில் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரில் ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்களை நிலைநிறுத்தியது.
பிப்ரவரி 1991 இல், குனன் போஷபோரா பகுதியில், தேடுதல் நடவடிக்கை என்ற போர்வையில் சுமார் நூறு காஷ்மீரி பெண்களை இந்திய சிப்பாய்கள் கற்பழித்தனர்.
ஏப்ரல் 1993 இல், இந்திய இராணுவம் லால் ஷவுக் என்ற வணிக வளாகத்திற்கு தீ வைத்தது நூற்றுக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றது.
ஒக்டோபர் 27, 1993 அன்று, கறுப்பு தின ஆண்டு விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இந்திய இராணுவத்தால் பை-பெஹெரா படுகொலைகளை மேற்கொண்டது அதன் போது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் 50 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
அதே ஆண்டு ஜனவரியில், ஒரு பயணிகள் பேருந்து மீது இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கிட்டத்தட்ட 60 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் அப்பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் இந்திய ராணுவத்தினரால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
காஷ்மீர் மக்களை பொறுத்தவரை, ஒவ்வொரு படுகொலையும் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான நீண்ட வரலாற்றில் ஒரு வலிமிகுந்த அத்தியாயமாகும்.
காஷ்மீர் மோதலின் மூன்றாவது மற்றும் தற்போதைய கட்டம் ஆகஸ்ட் 2019 இல் தொடங்கியது. இந்திய அரசு ஒருதலைப்பட்சமாக இந்திய அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 370 ஐ நீக்கி ஜம்மு காஷ்மீரிக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது.
இது ஒரு அரசியலமைப்பிற்கு முரணான மற்றும் சட்டவிரோத நடவடிக்கையாகும். சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரின் நேரடி கட்டுப்பாட்டை மறைமுகமாக இந்திய கைப்பற்றி அப்பிராந்தியத்தின் சுதந்திரத்தை ஒழிப்பதோடு காஷ்மீர் மீது இந்திய மாநிலங்களுக்கு செல்லுபடியாகும் சட்டங்களை திணித்தது.
சுருங்கக் கூறின், ஏழு தசாப்த காலமாக காஷ்மீர் நெருக்கடி என்பது மக்களின் சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டும் ஒட்டுமொத்தமாக மனித உரிமை மீறியும் வருவதால் அம்மக்களின் கதை சோகக்கதையாக ஆகியள்ளது.
அம்மக்களின் சுதந்திரத்தை பரித்த மோதலின் ஆரம்ப ஆண்டுகள் தொடக்கம் மக்களின் நியாயமான போராட்டங்களை இந்திய அரசு வன்முறையால் ஒடுக்கியது மற்றும் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் ரத்து செய்தமை இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான அடக்குமுறையின் ஒரு கொடிய வடிவத்தையே எடுத்துக் காட்டுகிறது.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை சர்வதேச சமூகம் நடைமுறைப்படுத்தத் தவறியதால், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்ந்தும் ஒரு காணல் நீராகியுள்ளது. கஷ்மீர் மக்கள் இந்திய அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாள் என்ற வகையில் ஒக்டோபர் 27 ஆம் திகதியை கருப்பு தினமாக நினைவு கூறுகின்றனர்.
இந்த நாள் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தையும், நீதி மற்றும் சுயநிர்ணய உரிமைக்கான அவர்களின் அசைக்க முடியாத கோரிக்கையையும் அடையாளப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
இந்த அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலான நெருக்கடியாக காஷ்மீர் பிரச்சினை இருக்கும் என்பது திண்ணம்.