கிழக்கு துருக்கியில் நிலநடுக்கம்: 190 பேர் வரை பாதிப்பு

Date:

துருக்கியில் இன்று 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் அச்சம் நிலவிய நிலையில், சேதம் அதக அளவில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.46 மணிக்கு ( உள்ளூஉள்ளூ நேரப்படி மதியம் 1.24) இந்த நிலநடுக்கம் மலாத்யா மாகாணத்தில் உள்ள காலே என்ற நகரில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கும் அருகில் உள்ள தியார்பகீர், எலாஜிக், சன்லியுர்ஃபா மற்றும் துன்செலி மாகாணத்திலும் உணரப்பட்டுள்ளது. சிரியாவின் வடக்குப்பகுதிகளில் உள்ள ஒரு சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். சுமார் ஒரு மணி நேரம் கழித்தும் வீட்டிற்கு திரும்ப மக்கள் அச்சப்பட்டு தெருக்கள் மற்றும் பூங்காக்களில் தஞ்சம் அடைந்தனர். மலாத்யா மற்றும் எலாஜிக் பகுதிகளில் பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டது.

நிலநடுக்கத்தால் 190 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் 43 பேர் மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர் என துருக்கி உள்துறை மந்திரி அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

பயம் காரணமாக வீட்டிற்கு ஜன்னல் வழியாக குதித்ததில் பலர் காயம் அடைந்துள்ளதாக எலாஜிக் மேயர் தெரிவித்துள்ளார். மாலத்யாவில் இது போன்று 20-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

மொத்தம் நான்கு கட்டடங்கள் இந்த நிலநடுகத்தில் பாதிப்படைந்துள்ளது. எலாஜிக்கில் நான்கு பேர் சேதமைடைந்த கட்டடத்தில் இருந்து காயமின்றி மீட்கப்பட்டனர்.

கடந்த வரும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் ஒன்று மலாத்யா. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியில் மட்டும் 53 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...