சம்பளம், சலுகைகள் இல்லாமல் ஜனாதிபதிக்கு இரண்டு ஆலோசகர்கள் நியமனம்

Date:

இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நிதி மற்றும் பொருளாதார விடயங்களில் ஆலோசனை வழங்கி வழிநடத்துவதற்காக இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று அமைச்சரவைக்கு பின்னரான வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நியமனங்கள் சம்பளம் அல்லது வேறு சலுகைகள் எதுவுமின்றி கௌரவமானவை என தெரிவித்தார்.

அதற்கமைய இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த குலங்கமுவவும்  ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் அனில் பெர்ணாண்டோவும் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் கலந்தாலோசித்த பின்னர் ஜனாதிபதி தனக்கான பணியாளர்களை நியமிக்கலாம், அரசமைப்பில் இதற்கு இடமுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அமைச்சரவை இந்த நியமனங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இரண்டு நியமனங்களும் செப்டம்பர்  24 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவை கௌரவ பதவிகள் எனவும் எந்த சம்பளமோ அல்லது வேறு நன்மைகளோ வழங்கப்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...