‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’: ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் நான்காவது சந்திப்பு!

Date:

‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’ நிகழ்வின் நான்காவது நிகழ்வு எதிர்வரும் 10.10.2024 அன்று வியாழக்கிழமை மு.ப. 9.30 முதல் பி.ப. 1.30 வரை இடம்பெற இருக்கின்றது என்பதை ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பின்வரும் இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொள்வதன் மூலமாக அல்லது IMO ஊடாக அழைப்பை ஏற்படுத்துவதன் மூலம் சவூதி அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களுடன் நேரடியாக உரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து சவூதி அரேபியாவில் வாழ்கின்ற சகல பிரஜைகளும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருடன் நேரடியாகப் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரியாதில் உள்ள இலங்கை தூதரகம் ‘உங்கள் தூதுவருடன் நீங்களும் உரையாடலாம்’ என்ற பெயரில் சமூகத்தை நோக்கிய ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது.

ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்தப் புதிய முன்னெடுப்பினை இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் கட்டியெழுப்பப்பட்டு 50 ஆண்டு பூரணமாவதைக் கொண்டாடுவதுடன் அறிமுகப்படுத்துகிறது.

 

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...