நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் இல்லை: பாதுகாப்பு அமைச்சு

Date:

சுற்றுலாப் பயணத் தளங்கள் மற்றும் நாட்டின் பிரதான பகுதிகளில் குண்டுத்தாக்குதல்கள் உட்பட எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் பிரதான சுற்றுலாத்தளங்களை மையப்படுத்திய தாக்குல்கள் நடத்தப்படவுள்ளதாக எமக்கு புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு ஒக்டோபர் முதல் வாரத்திலேயே தகவல்கள் கிடைத்திருந்தன.

இதனையடுத்து தேசிய பாதுகாப்புச் சபை உடனடியாக கூட்டப்பட்டு எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும், இவ்விடயம் சம்பந்தமாக வெளிநாடு தனது பயணிகளுக்காக முன்னெச்சரிக்கையை விடுத்திருந்தது. அதனையடுத்தே விடயம் பகிரங்கமானது.

ஆனால் அதற்கு முன்னதாகவே சுற்றுலாத்தளங்கள் உட்பட நாட்டின் பிரதான பகுதிகள் அனைத்துமே பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

தற்போது அந்த நிலைமை மேலும் தீவிரமாக்கப்பட்டு பாதுகாப்பு அதியுச்சமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பிரஜைகளும் அச்சமடைய வேண்டியதில்லை.

நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் அனைத்தும் களையப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் உட்பட நாட்டின் பிரஜைகள் அனைவரும் சுதந்திரமாக நடமாட முடியும் என்றார்.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...