எம்.எச்.எம். நாளீர் ஆசிரியர் எழுதிய ‘முன்மாதிரி ஆசிரியர் முஹம்மத்’ நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (22) மாலை 7 மணிக்கு கொழும்பு 07, ஜே.ஆர்.ஜெயவர்தன கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
ஸலாமா சொஸைட்டியின் தலைவர் அஷ்-ஷேக் ஆசாத் அப்துல் முயீத் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் விஷேட உரையை தேசிய கல்வி நிறுவனத்தின் தலைமை திட்ட அதிகாரி அஷ் ஷேக் எம்.எச்.எம். புஹாரி (நளீமி) நிகழ்த்தவுள்ளார்.