இலங்கையின் அரபுக் கல்லூரிகளின் வரிசையில் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரியாக கருதப்படுகின்ற, புத்தளம் நகரில் அமைந்திருக்கின்ற காசிமிய்யா அரபுக்கல்லூரி, 100 ஆண்டுகளைத் தாண்டி இயங்கி வருகின்ற அரபுக்கல்லூரியாகும்.
இக் கல்லூரியில் நீண்டகாலமாக கடமை புரிந்த முன்னாள் புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க். அப்துல்லாஹ்
மஹ்மூத் ஆலிம் அவர்கள் சுகவீனம் காரணமாக தன்னுடைய அதிபர் பதவி பொறுப்பை விட்டு நீங்கியதைத் தொடர்ந்து இப்பொறுப்பை புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட இஸ்லாமிய அறிஞர், பிரபல எழுத்தாளர், பேச்சாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) அவர்கள் கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
மார்க்க அறிவுத்துறையிலும் சமூகப் பணிகளிலும் நீண்டகால அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட அஷ்ஷெய்க். மின்ஹாஜ் அவர்கள், எலவே புத்தளம் ஜம்இய்யதுல் உலமா தலைவராகவும் இஸ்லாஹியா அரபுக்கல்லூரியின் விரிவுரையாளராகவும் கடமையாற்றியதோடு இன்னும் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்ற ஒருவராவார்.
புதிய பதவியும் பொறுப்பும் அவருடைய பொறுப்பை இன்னும் சிறப்பாக செய்வதற்கும், நூற்றாண்டு தாண்டிய காசிமியா அரபுக்கல்லூரியின் மற்றொரு மைல் கல்லை அவருடைய பதவிக்காலத்தில் எட்டவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.