பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அறிவிப்பு

Date:

பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் சான்றிதழ்களை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களினால் இம்மாதம் முழுவதும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படவுள்ளது

ஒக்டோபர் மாதம் முழுவதும் இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களுக்கு எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...