மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவிப்பு

Date:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்கள்  இலங்கை  தூதரகங்களால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, அதற்கேற்ப செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய மோதலின் தீவிரம் குறிப்பாக லெபனானில் ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இப்பிராந்தியத்தில் கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் பணிபுரிவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் பாதுகாப்பையும், நலனையும் உறுதிப்படுத்த ஏற்கனவே அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அறிவுறுத்தல்களும் இலங்கை தூதரகங்களால் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.

மேலும் மத்திய கிழக்கில் பணிபுரியும் மற்றும் வசிக்கும் தனது நெருங்கிய உறவினருக்கு அவசர நிலை ஏற்பட்டிருப்பின் அது பற்றிய தகவல்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.

(தொலைபேசி: 011 – 2338812/ 011 – 7711194)

Popular

More like this
Related

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இம்முறை ஹம்பாந்தோட்டையில்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது தேசிய மீலாத் விழா நிகழ்வுகள்...

பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் அறிமுகம்

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்கு வாட்ஸ்அப் தொலைபேசி...

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...