அறுகம்பை பகுதியிலிருந்து இஸ்ரேலியர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள்

Date:

இலங்கையின் அறுகம்பை உட்பட தெற்கு மேற்கு கடற்கரை பகுதிகளில் இருந்து தனது பிரஜைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் காணப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படும் பகுதிகள் கடற்கரையோரங்களை அடிப்படையாக வைத்து பயங்கரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக கிடைத்துள்ள புதிய தகவலை தொடர்ந்தே இந்த வேண்டுகோளை விடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

எனினும் எவ்வகையான அச்சுறுத்தல் என்பது குறித்து விசேடமாக எதனையும் குறிப்பிடாத இஸ்ரேலிய அரசாங்கம் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொதுஇடங்களில் பலர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளை நடத்தவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் பாதுகாப்பு தரப்பினர் இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு பேரவை தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...