அரச வாகனங்கள், சொத்துகள் தொடர்பில் புகாரளிக்க அவசர இலக்கம்

Date:

அரச வாகனங்கள் மற்றும் சொத்துகள் ஆகியன தவறாக பயன்படுத்தப்பட்டால் அல்லது திருடப்பட்டால், அது தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் 1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

துல்லியமான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு பண ஊக்கத்தொகை வழங்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டமானது, பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதையும் அரச சொத்துகளை சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...