நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் கொகமுல்ல பகுதி, மெகொட, கொலன்னாவ பகுதியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 650 குடும்பங்களுக்கு பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் நேற்று (15) நிவாரண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அல் நூரானியா பள்ளிவாசல் வளாகத்தில் இனம், சாதி , மத பேதமின்றி , பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) ஃபஹீம் உல் அசிஸ் எச்.ஐ (எம்) அவர்களால் இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாகிஸ்தானின் மனிதாபிமான நிவாரண உதவி வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இம் முயற்சி அமைந்துள்ளது.