தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு ஸூபிஸ சமூகம் வாக்களிக்க வேண்டும்.விருப்பு வாக்களிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மிஸ்பாஹீ நாயகம் அவர்களால் அது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என ஸூபிஸ சமூக அரசியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அது தொடர்பாக விசேட கூட்டம் 24ஆம் திகதி நடைபெற்றது.
இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணம் இலங்கை மக்கள் அனைவருக்கும் சம உரிமை என்ற கொள்கை தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுவதேயாகும்.
எங்களின் உரிமைகளை மதிக்கின்ற மனித நேயம் மிக்க தலைமைக்கு எங்களின் வாக்குகளை வழங்கி கட்சியை பலப்படுத்த நாம் ஒன்றினைந்து பாடுபடுவோம். தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வொரு பகுதிகளையும் மையப்படுத்திய சிறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அரசியல் பிரிவின் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள்.
இலங்கை நாட்டில் வாழும் ஸூபிஸ முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்கக் கூடிய எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரிப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கட்சிகளில் பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நானும், ஸூபிஸ சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தோழர் அநுர குமார திஸாநாயக அவர்களின் “தேசிய மக்கள் சக்தி”யை ஆதரிப்பதென்று முடிவு செய்துள்ளோம். ஆயினும் வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பதென்று இதுவரை முடிவு செய்யவில்லை.
நீங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்வது உங்களின் உரிமை. இதில் எவரும் எவரையும் பலாத்காரம் செய்வது மனித உரிமை மீறலாகும்.
நமது இலங்கைத் நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளன. குறிப்பாக மத உரிமை அனைவருக்கும் உண்டு. எவரும் எவரையும் வற்புறுத்தியும். பயம் காட்டியும் வாக்கு கேட்க முடியாது.
ஆனாலும் ஒரு சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அரசியலில் அந்தச் சமூகம் தனது தலைமத்துவத்திற்கு கட்டுப்பட்டு வாக்களிப்பதென்பது சாதாரண விடயமாகும்.
எனவே, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சமூக நீதியை தலைப்பாகக் கொண்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட தோழர் அநுர குமார திஸாநாயக அவர்களின் “தேசிய மக்கள் சக்தி”க்கு ஆதரவளிப்பதென ஸூபிஸ சமூகத்தின் அரசியல் பிரிவு தீர்மானித்துள்ளது.