இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 58 இலங்கையர்கள் கைது!

Date:

இணையத்தில் பணம் மோசடி செய்த 58 இலங்கையர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பு கிருலப்பனை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் இன்று (09) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அண்மைக்காலமாக  இலங்கையின் பல பகுதிகளில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த மோசடியில் இந்தியா, சீனா, உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள்  இலங்கையில் தங்கியிருந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...