இன்று முதல் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதில் புதிய நடைமுறை!

Date:

இன்று (06) முதல் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெறுவதற்கான திகதியை இணையத்தில் முன்பதிவு செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் பற்றாக்குறை காரணமாக, தினசரி வழங்கப்படும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதால், கடந்த சில மாதங்களாக திணைக்களத்தின் கொழும்பு தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

இம்மாதம் தொடர்பான திகதிகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் இணையத்தில் திகதிகளை முன்பதிவு செய்பவர்களுக்கு அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து திகதிகளை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...