ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இஸ்ரேலிய-மால்டோவா ரப்பியின் கொலை விவகாரத்தில் மூன்று சந்தேக நபர்கள் இஸ்தான்புலில் கைது!

Date:

ஆர்த்தோடாக்ஸ் யூத தீவிரவாத அமைப்பான சாபாத்தின் ரப்பியான ஸ்வி கோகன் துபாயில் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் கோகனின் உடல் ஓமான் எல்லையில் உள்ள அல் ஐன் எமிராட்டி நகரத்தில் அவரது இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.

இருப்பினும் அவர் அங்கு கொல்லப்பட்டாரா அல்லது வேறு எங்காவது கொல்லப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அதேவேளை இச் செயலுடன் தொடர்புடைய மூவர் துருக்கியின் இஸ்தான்புலில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

“சாபாத்” என்ற அமைப்பு உலகின் மிகப்பெரிய யூத தீவிரவாத அமைப்பாகும். 1775 முதல் இயங்கி வரும் பழமையான இவ்வமைப்பின் தலைமையகம் அமெரிக்காவில் இருக்கிறது.

இன்றைய யூதர்களின் வாழ்க்கையுடன் தொடர்பான பல விடயங்களில் இந்த அமைப்பு தொடர்புகளைப் பேணி வருகிறது.

குறிப்பாக இவ் அமைப்பின் கடுமையான கொள்கை யாதெனில், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிரதேசங்களில் இருந்து ,குறிப்பாக மேற்குக் கரை, காஸா பகுதிகளில் இருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேறக் கூடாது என்பதும்,அவ்வாறு செய்வது இஸ்ரேலியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கருதுகிறார்கள். “அகன்ற இஸ்ரேல் தேசம் ” என்ற சிந்தனை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இவ் அமைப்பு வலுவாக நம்புகிறது.

இதேவேளை,அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உறவினரான கோடீஸ்வரர் குஷ்னர்,எமிரேட்ஸில் யூத சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ‘சபாத்’என்ற இயக்கத்துக்கு ஒரு மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளமை அறபு வளைகுடா மண்ணில் யூத ஆதிக்கம் மேலும் அதிகரித்து வருவதை காட்டி வருவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...