ஹரிணி அமரசூரிய
பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர்
கொழும்பு பிஷப் கல்லூரியின் பழைய மாணவியான ஹரிணி அமரசூரிய, டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் BA பட்டத்தையும், Macquarie பல்கலைக்கழகத்தில் மானுடவியல் மற்றும் அபிவிருத்திக் கற்கைகளில் BA பட்டத்தையும் பெற்றார். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் PhD பட்டம் பெற்றார்.
அவர் 2020 இல் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கு முன்னர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்தார்.
………………………………….
விஜித ஹேரத்
வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
களனி பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றவர். ஜே.வி.பி.யில் முழு நேரமும் பணியாற்றுவதுடன் 2000 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ளார்.
……………………………
பிமல் ரத்நாயக்க
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்
பிமல் 1989 ஆம் ஆண்டு பாடசாலையில் கல்வி கற்கும் போதே ஜே.வி.பியில் இணைந்தார். 2004 இல் அவர் குறுகிய காலத்திற்கு விவசாய பிரதி அமைச்சரானார். தங்காலை ஆரம்ப பாடசாலை மற்றும் ஆனந்தா கல்லூரியில் படித்த இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
…………………….
ஹர்ஷன நாணயக்கார
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர்
கொழும்பில் உள்ள இசிபதன கல்லூரியில் பயின்று, இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் LLB முடித்துள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தில் குற்றவியல் வழக்கறிஞராக இருந்தார்.
.…………………..
சரோஜா சாவித்திரி பால்ராஜ்
குழந்தைகள் மற்றும்
சிறுவர்மற்றும்விவகார அமைச்சர்
விஞ்ஞானம் மற்றும் தமிழ் ஆசிரியராகவும் ருஹுணு பல்கலைக்கழகத்தில் வருகை விரிவுரையாளராகவும் இருந்தார். அவர் களனி பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு மற்றும் உரை பெயர்ப்பு பட்டம் பெற்றுள்ளார்.
.……………………..
பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்
கிரிஷாந்த அபேசேன கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்றவர்.
கந்தானை டி மஸெனோட் கல்லூரியில் பயின்றார். அவர் சமூக மருத்துவத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார், கிறிஸ்தவ ஆய்வுகள் மற்றும் புத்த ஆய்வுகளில் பட்டம் பெற்றுள்ளார். அவர் ராகம மருத்துவ பீடத்தில் சேர்ந்து பேராசிரியராக வருவதற்கு முன்பு மருத்துவராக பணியாற்றினார்.
……………………………..
சுனில் ஹதுன்நெத்தி
கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர்
கொட்டபொல மகா வித்தியாலயம் மற்றும் அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தின் மாணவரான இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ இளங்கலை பட்டத்தை பெற்றுள்ளார்.
……………………..
இராமலிங்கம் சந்திரசேகர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்
பண்டாரவளையைச் சேர்ந்த இவர் 1987 கிளர்ச்சியின் போது ஜே.வி.பி அமைப்பாளராக அரசியலில் நுழைந்தார். ஜே.வி.பி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ஏற்படுத்திய கூட்டணியின் தேசியப் பட்டியல் எம்.பி.யாக அவர் நாடாளுமன்றம் நுழைந்தார். ஜே.வி.பி.யின் யாழ்.மாவட்ட அமைப்பாளராக சந்திரசேகர் 15 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றியுள்ளார்.
…………………………….
சந்தன அபேரத்ன – பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
களனிப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான சந்தன அபேரத்ன, இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நுழைவதற்கு முன்னர் அதே பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
………………………….
வசந்த சமரசிங்க – வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
தம்புத்தேகமவில் பாடசாலைக் கல்வியை முடித்துள்ளதுடன் களனி பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றுள்ளார். பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகவும், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் செயற்குழு அழைப்பாளராகவும் இருந்தார்.
………………………
பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – தொழில் அமைச்சர்
அனில் ஜயந்த பெர்னாண்டோ பட்டயக் கணக்காளர், சான்றளிக்கப்பட்ட நிர்வாகக் கணக்காளர் மற்றும் வணிகக் கற்கைகளில் பட்டதாரி ஆவார்.
……………..
நலிந்த ஜயதிஸ்ஸ – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
பொலேகொட மகா வித்தியாலயம் மற்றும் மத்துகம சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்ற இவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி கற்கும் போது மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.
2004 இல், சந்திரிகா குமாரதுங்க அரசாங்கத்தில் ஜே.வி.பி இணைந்த காலப்பகுதியில் அவர் மீன்பிடி பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றினார்.
…………………..
ஆனந்த விஜேபால – பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத்தில் BA பட்டமும் களனி பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத்தில் MA பட்டமும் பெற்றுள்ளார். அவர் குற்றவியல் நீதித்துறையில் முதுகலை டிப்ளோமா மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ கற்கையையும் முடித்துள்ளார்.
……………..
பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி – புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர்
25 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள மூத்த கல்வியாளரான பேராசிரியர் சுனில் செனவி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மொழிகள் பிரிவில் பேராசிரியராக இருந்தார். அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் BA பட்டமும், களனி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டமும் பெற்றார்.
அவர் ஒரு இலக்கிய விமர்சகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார்.
…………………….
சமந்த வித்யாரத்ன – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
பதுளை ரிதிமாலியத்தவில் பிறந்த சமந்த வித்யாரத்ன ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராவார். அவர் முன்னாள் எம்.பி மற்றும் கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரியத்தின் முன்னாள் பிரதி அமைச்சரும் ஆவார்.
களனி பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டதாரி ஆவார்.
………………..
கே.டி.லால்காந்த – விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
ஜே.வி.பி.யின் மூத்த உறுப்பினரான லால்காந்த, தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவராகவும், NPP இன் செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். பல தசாப்த கால அனுபவமுள்ள அரசியல்வாதியான லால்காந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.
………………………
தம்மிக்க படபெதி – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றார். கொழும்பு மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றவர்.
………………………….
அனுர கருணாதிலக்க – நகர அபிவிருத்தி மற்றும் நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர்
களனிப் பல்கலைக்கழகத்தின் கணிதத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்.
…………………….
உபாலி பன்னிலகே – கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு அமைச்சர்
ருஹுணு பல்கலைக்கழகத்தின் மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பன்னிலகே NPP இன் தேசிய செயற்குழு மற்றும் அதன் கொள்கை உருவாக்கும் குழுவின் உறுப்பினராக உள்ளார்.
……………
குமார் ஜெயக்கொடி – எரிசக்தி அமைச்சர்
பொறியியலாளர், NPP இன் தேசிய செயற்குழு உறுப்பினருமாவார்.