புலமைப்பரிசில் பரீட்சை: டிசம்பர் 2ஆம் திகதி அரசாங்கத்தின் இறுதி முடிவு

Date:

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பரீட்சை வினாத்தாளில் கேள்விகள் கசிந்தமை தொடர்பில் ஆராய்ந்த மூன்று குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமையும்.

அந்த குழுக்களின் அறிக்கையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் மேற்கொள்வார் என அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு மற்றும் முடிவுகளை வெளியிடுவதை நிறுத்தி வைத்து நவம்பர் 18ஆம் திகதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...