தவணைப்பரீட்சை வினாத்தாளில் அரசியல் வினாக்கள்: கல்வி அமைச்சு விரைவான விசாரணை

Date:

களுத்துறை மாவட்ட  பாடசாலையொன்றில் இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உயர்தர வினாத்தாளில் அரசியல் கட்சி தொடர்பான 05 வினாக்கள் இடம்பெற்றிருந்தமை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சு மட்டத்திலோ அல்லது வேறு எந்த நிறுவன மட்டத்திலோ இதற்கான தொடர்பு இல்லை என்றும், குறித்த வினாத்தாள் அந்த பாடசாலையால் தயாரிக்கப்பட்டது என்றும் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர  அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

இதனுடன் தொடர்பான உரிய அதிகாரிகளுக்கு ஏற்கனவே தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...