தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Date:

தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அனுப்பி வைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கட்சிகளின் செயலாளர்களுக்கு நேற்றையதினம்  அனுப்பப்பட்டுள்ளதாகத் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுத்தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 18 தேசியப்பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அந்த கட்சியினால் தெரிவுசெய்யப்படும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் இன்றையதினம் (17) அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசியப்பட்டியல் ஆசனங்களைக் கைப்பற்றியதுடன், அதற்கான தமது பிரதிநிதிகளை நியமனம் செய்யும் பணிகள் எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் எனக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஜனநாயக முன்னணி 02 தேசியப் பட்டியல் ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், இதற்காக நியமிக்கப்படவுள்ள பிரதிநிதிகள் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்றது.

இதனிடையே பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்துள்ள ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்காக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அக்கட்சியின் பொதுச் செயலாளரால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

அதேநேரம், சர்வஜன அதிகாரம் கட்சியினால் நியமிக்கப்படவுள்ள தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பில் நாளையதினம் (18) தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், நியமிக்கப்படவுள்ள தேசியப் பட்டியல் உறுப்பினர் தொடர்பில் இன்று அல்லது நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என அந்த கட்சியின் செயலாளர் பா.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முஸ்லிம் காங்கிரஸுக்கும் ஒரு தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்துள்ள நிலையில், அதற்காக நியமிக்கப்படவுள்ள உறுப்பினர் தொடர்பில் இதுவரையில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...