முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான பிரதிநிதியொருவர் அமைச்சரவையில் இல்லாதிருப்பது கவலை தருகிறது – முஸ்லீம் லீக் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.

Date:

புதிய அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான எமது பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உங்களது அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் உங்களிடம் முன்வைக்கிறோம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு வரைந்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸ்ஸநாயக இன்று (18) நியமித்த அமைச்சரவையில் முஸ்லீம் சமூகத்தில் இருந்து எவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நிகழ்ந்துள்ள இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2024.11.14 ஆம் திகதி நடைபெற்ற 10 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தலில் நீங்கள் தலைமை வகிக்கும் அணி அனைத்து மக்களினதும் ஆதரவுடன் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து உங்களால் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையின் எதிர்காலச் செயற்பாடுகள் சகல வழிகளிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காகப் பணியாற்றத் கூடிய அமைச்சரவையாக மாற வேண்டும் என நாங்கள் மனதாரப் பிரார்த்திக்கிறோம் எனவும்

இந்த அமைச்சரவையில் எமது முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை பிரதிபலிப்பதற்கான எமது பிரதிநிதியொருவர் இல்லாதிருப்பதனால் எமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் உங்களது அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கு உள்ள வாய்ப்பு இல்லாமல் போகிறது என்பதனை கவலையுடன் உங்களிடம் முன்வைக்கிறோம் எனவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர்,

கௌரவ ஜனாதிபதி அவர்கள் இந்த விடயத்தில் கரிசனை காட்டி துரிதமாக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்காக எமது சமூகத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனவும் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

Popular

More like this
Related

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர் கொழும்பு வருகை

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சயீத் பின் முபாரக்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...