நாடாளுமன்ற தேர்தல் 2024: தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Date:

பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலுக்கு மறுதினம் பௌர்ணமி தினமாக உள்ள போதிலும், பெரும்பாலான விகாரைகளின் விகாராதிபதிகள் விகாரைகளை வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிக்கவில்லை .

இந்த ஆண்டு பொதுத்தேர்தலில் 2,263 விகாரைகள் வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்தப்பட உள்ளன. விகாரையில் விசேட வழிபாடுகள் நடைபெறுவதால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ள போதிலும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஊடாக விகாரைகளில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு சமூகமாக இடம்பெற்றுவருகின்றது. தபால் மூல வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்த போதிலும் ஏதேனும் காரணிகள் நிமித்தம் வாக்களிக்க தவறியவர்கள்  எதிர்வரும் 7 மற்றும் 8 ஆகிய தினதிகளில் வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

7ஆம் திகதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிடின், அருகிலுள்ள தபால் நிலையத்துக்குச் சென்று அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும்” இவ்வாறு ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...