பரீட்சை திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Date:

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து பிரத்தியேக வகுப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.

குறித்த தடையானது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல் பரீட்சை திணைக்களத்தினால்  வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

அத்துடன், உயர்தர பரீட்சைக்கு விண்ணப்பித்த பாடசாலை மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணை அந்தந்த பாடசாலை அதிபருக்கும், தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டை மற்றும் நேர அட்டவணை அவர்களின் தனிப்பட்ட முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபாலில் அனுமதி அட்டைகளைப் பெறாத தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இலிருந்து நவம்பர் 18ஆம் திகதி முதல் அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அனைத்து பரீட்சார்த்திகளும் http://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தளத்தில் நவம்பர் 18ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிவரை திருத்தங்களைச் செய்யலாம் எனவும், பரீட்சை நிலையங்கள் மாற்றப்பட மாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...