பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

Date:

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக இரண்டு தினங்களுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் புதன் (13) மற்றும் வியாழன் (14) ஆகிய இரண்டு தினங்களுக்கும் பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் திங்கட்கிழமை (18) மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகள் அந்தந்த பிரதேசத்திற்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களிடம் நாளை (12) கையளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல் பணிகளுக்கு அவசியமான, மேசை, கதிரை, மண்டபம் போன்றவற்றை வழங்கச் சகல வலய கல்வி பணிப்பாளர்களும், அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...