பிள்ளையான் குற்றப்புலனாய்வுப் பிரிவில் 5 மணிநேர வாக்குமூலம்!

Date:

பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 5 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளியொன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

அதில் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய தாக்குதல்தாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் அவர் வெளிப்படுத்திய இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அங்கு முன்னிலையாகி 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதையடுத்து, அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

 

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...