Update: ஹரின் பெர்னாண்டோ கைது!

Date:

நடந்து முடிந்த பொதுத் தேர்தலின் போது தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை பதுளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பதுளை பொலிஸ் நிலையத்தில் இன்று வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவம்பர் 11 ஆம் திகதி பதுளை நகரில் நடைபெற்ற பிரச்சார நிகழ்வின் போது தேர்தல் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டிய ஹரின்  பெர்னாண்டோவின் ஆதரவாளர்களால்  பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

ஹரின்  பெர்னாண்டோவும் அவரது ஆதரவாளர்களும் அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் சின்னம் கொண்ட டி-சர்ட்களை அணிந்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேலும் பொலிஸாருடனான காரசாரமான வாக்குவாதத்தின் போது, ஹரின் ​​பெர்னாண்டோ ஒரு அதிகாரியிடம், “நான் வெற்றி பெற்றால், தேர்தலுக்குப் பிறகு உங்களைப் பார்க்கிறேன்” என்ற கருத்தால் சர்ச்சை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...