அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு; ட்ரம்ப் முன்னிலை!

Date:

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப்  முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, டென்னெஸ்சீ, தெற்கு கரோலினா, மிஸ்சிஸ்சிப்பி, புளோரிடா, ஒக்லஹோமா போன்ற மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்றுள்ளார்.

அமெரிக்காவில்  ஜனாதிபதி தேர்தல்  முடிவு எப்படி இருக்கும் என்பதை அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது.

தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை கமலா ஹரிஸ் சிறிய வித்தியாசத்தில் முந்திவந்தாா். இருந்தாலும், கடைசி நேரத்தில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் கடுமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

எலக்டோரல் காலேஜ் வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி வாக்களிப்பார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் யார் எத்தனை மாகாணங்களில் வென்றுள்ளார்களோ அதைப் பொறுத்தே இந்த எலக்டோரல் காலேஜ் முடிவுகள் இருக்கும். டிசம்பர் 17ம் திகதி பதிவாகும் எலக்டோரல் காலேஜ் வாக்குகள் ஜனவரி 6ம் திகதி எண்ணப்பட்டு முடிவு இறுதி செய்யப்படும்.

அதாவது ஜனவரி 6ம் திகதி தான் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதனை தொடர்ந்து ஜனவரி 20ம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...