அறுகம்பை தாக்குதல் குறித்து ஒக்டோபர் 23ம் திகதி வெளியிட்ட பயண எச்சரிக்கையை இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விலக்கிக்கொண்டுள்ளது.
இதன்போது அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்
அமெரிக்க பிரஜைகள் அனைவரும் இலங்கைக்கான பயண எச்சரிக்கையை மீளாய்வு செய்யவேண்டும், எச்சரிக்கைய கடைப்பிடிக்க வேண்டும், உங்கள் சுற்றுசூழல் குறித்து தெரிந்து சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கைள் குறித்து உள்ளுர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
நிலைமை சரியில்லை என உணர்ந்தால் அங்கிருந்து வெளியேறுங்கள், எப்போதும் தொடர்பாடல் வசதிகளை பேணுங்கள் உள்ளுர் பத்திரிகைகள் ஊடகங்களை பயன்படுத்துங்கள் எனவும் அமெரிக்க தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.