‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’: மக்களின் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்க புதிய திட்டம்

Date:

பொது மக்கள் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க மற்றும் அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘ஆளுநருக்கு சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டம் டிசம்பர் 2 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக மேல் மாகாண சபை மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்களின் சேவை, விதிமீறல்கள் மற்றும் பொது மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள விரைவாக நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் 2025 ஜனவரிக்கு பிறகு வட்ஸ்அப் மற்றும் இணையம் மூலமாகவும் குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், இந்த திட்டத்திற்கு பொறுப்பாக மக்கள் தொடர்பு அதிகாரியாக அருண பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தங்கள் முறைப்பாடுகளை அறிவிக்க,
தொலைபேசி – 011-2092720 / 011-2092721
தொலைநகல் – 011-2092705
மின்னஞ்சல் – operationroomwpe@gmail.com

 

 

 

Popular

More like this
Related

காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத் புளோட்டிலாவை கண்காணிக்கும் துருக்கி ட்ரோன்கள்

இஸ்ரேலின் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், காசாவிற்கு உதவிகளை ஏற்றிச் செல்லும் குளோபல் சுமுத்...

காசா போர் முடிவுக்கு வருமா? இன்று டிரம்ப் – நெதன்யாகு சந்திப்பு!

இஸ்ரேல் - பலஸ்தீனம் இடையேயான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி...

இலஞ்சம் வாங்கிய முன்னாள் சீன அமைச்சருக்கு மரணதண்டனை

சீனாவில் ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு கடந்த சில காலமாகவே லஞ்சம்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்கள் பதிவாகும் வீதம் நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...