இணையவழி மோசடி தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு..!

Date:

வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக இணையவழி நிதி மோசடிகளில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம்.

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடி செய்யப்படுவதாக பல முறைப்பாடுகள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் மூலமாக அனுப்பப்படும் லிங்குகளை கிளிக் செய்யவோ, அல்லது OTP அல்லது கடவுச் சொற்களை வேறு நபர்களுக்கு பகிரவோ, குறுஞ்செய்தி, வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...