கம்பஹா மாவட்டம் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல்இமாம் ஷாபி நிலையத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு கம்பஹா மாவட்ட அஹதியா சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒருநாள் அறிவரங்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை திஹாரிய லப்ஸன்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இவ்வறிவரங்கத்தின் வளவாளர்களாக பின்வருவோர் கலந்துகொண்டு பின்வரும் தலைப்புக்களில் விரிவுரைகளை வழங்கவுள்ளனர்.
01. இமாம் ஷாபிஈ அவர்களின் வாழ்வும் பணியும்- கலாநிதி அஷ்ஷெய்ஹ் அஹ்மத் அஸ்ஹர் (PhD) பொருளாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் – ACJU
02. அரபு மொழி மற்றும் அரபு இலக்கியத் துறையில் இமாம் ஷாபிஈ அவர்களின் பங்களிப்பு- அஷ்ஷெய்ஹ் A.B.M அஷ்ரப் (SLAS)
முன்னாள் பணிப்பாளர் – முஸ்லிம் விவகாரத் திணைக்களம்.
03. சுன்னா பற்றிய இமாம் ஷாபிஈ அவர்களின் நிலைப்பாடு-
கலாநிதி அஷ்ஷெய்ஹ் முஹம்மது முபீர் (PhD)
அதிபர் – இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை
04. பிக்ஹு மற்றும் உசூலுல் பிக்ஹு துறையில் இமாம் ஷாபிஈ அவர்களின் வழிமுறை- அஷ்ஷெய்ஹ் M.A.M ழபர் (பஹ்ஜி) B.A
சிரேஷ்ட விரிவுரையாளர்
இபுனு அப்பாஸ் அரபுக் கல்லூரி – காலி
நிகழ்வின் பிரதம அதிதியாக கல்வியலாளரும் முன்னாள் அதிபருமான அஷ்ஷெய்ஹ் எம்.ஜே.எம்.மன்ஸுர் (M.A) அவர்கள் கலந்துகொள்ளும் இவ்வறிவரங்கத்தில் விஷேட அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம்.டீ.எம்.தௌஸீர் (நளீமி, SLEAS) அவர்களும் அஹதியா மத்திய சம்மேளனத்தின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம்.சரூக் அவர்களும் கம்பஹா மாவட்ட அஹதியா சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.மசூத் உட்பட இன்னும் பல பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது பங்குபற்றும் அஹதியா ஆசிரியைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவரங்க ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் அஷ்ஷெய்ஹ் எஸ்.ஏ.எம்.பௌஸான் (இஸ்லாஹி) தெரிவித்துள்ளார்.