காஸாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக இடம்பெற்று வரும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக இஸ்லாமிய உலகம் ஒன்றுபட வேண்டும் என்று துருக்கிய ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் எர்டோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்தான்புலில் திங்கட்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு நிலைக் குழுவின் (COMCEC) 40வது கூட்டத்தில் உரையாற்றிய துருக்கி ஜனாதிபதி ரெசப் தாயிப் எர்டோகன், பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் துயரமான மனிதாபிமானப் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
மேலும் “இது இக்காலத்தின் மிகவும் பயங்கரமான இனப்படுகொலைகளில் ஒன்றாகும், இஸ்ரேலிய படையெடுப்பு மற்றும் பீரங்கி தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தும் விதமாக, முஸ்லிம் நாடுகள் தங்களிடையே இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டியது இன்றியமையாதது என அவர் வலியுறுத்தினார்.
பலஸ்தீன மக்களின் துன்புறுத்தலுக்கும் லெபனானிய மக்களின் உரிமைக்காகவும் முஸ்லிம் உலகம் ஒற்றுமையுடன் நிற்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இஸ்ரேலின் படையெடுப்புக்கும் பலஸ்தீன மக்களின் மீதான அநியாயத்திற்கும் எதிராக பலஸ்தீன மற்றும் லெபனான் மக்களை ஆதரிப்பது இஸ்லாமிய உலகத்திற்கு மிக முக்கியம் என எர்டோகன் தெரிவித்தார்.
துருக்கியின் மனிதாபிமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எகிப்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் காசா பகுதியில் 85,000 டன் பொருளாதார உதவிகளை அனுப்பியுள்ளதையும் அவர் குறிப்பிட்டார்.