அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவுகள் விறுவிறுப்பாக வெளியாகி உள்ளன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.
டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்ட்ரல் வாக்குகளை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார்.
தற்போது வரை 267 எலக்ட்ரல் வாக்குகளை வென்றுள்ளார். இதன் மூலம் டிரம்ப் வெற்றி உறுதியாகி உள்ளது. கமலா ஹாரிஸ் 214 வாக்குகளை வென்றுள்ளார்.
மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார். அவரின் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் அணுகுண்டுகளை பற்றி வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப். நான் நினைத்தால் வடகொரியாவை தாக்குவேன். ஒரே ஸ்விட்ச் போதும். சிவப்பு கலர் ஸ்விட்ச். அதை அழுத்தினால் அணுகுண்டுதான்.
என் மேசையில் பெரிய சிவப்பு ஸ்விட்ச் இருக்கிறது. அதை அழுத்தினால் வடகொரியாவை அணு ஆயுதம் மூலம் தாக்கலாம் என்று டிரம்ப் கூறி இருந்தார். சமீபத்தில் கூட ஈரானின் அணு உலை மையங்களை விடக்கூடாது.
அதைதான் முதலில் தாக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வேட்பாளர் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார். அதன்படி ஈரான் நாட்டிடம் இருக்கும் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வேண்டும். அப்படி நடத்துங்கள்.. மற்றதை பற்றி கவலைப்பட வேண்டாம். பின்னர் நடக்க போவதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில் அணு உலைகளை குறி வையுங்கள் என்று டிரம்ப் ஐடியா கொடுத்துள்ளார். என்ன நடக்கும்?:
இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில்.. உலக அரசியலில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
1. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் உதவிகள் கண்டிப்பாக அதிகரிக்கும். இஸ்ரேல் கசாப் போரை முடிக்க அழுத்தம் கொடுக்கும்.
2. காசா போர் முடியும் வாய்ப்புகள் ஏற்படும். அதாவது ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அறிவித்தது டிரம்ப்தான். அதோடு இஸ்ரேல் காசா தாக்குதலை வேகமாக நடத்தி அனைத்தையும் முடிக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
3. 3ம் உலகப்போருக்கு மிக நெருக்கமாக உலக நாடுகள் இருப்பதாக.. முக்கியமாக அமெரிக்கா இருப்பதாக அமெரிக்கா அதிபர் வேட்பாளர் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் அவர் வருவதால் அதை நோக்கி நிகழ்வுகள் செல்லலாம்.
4. டிரம்ப் என்னதான் கோபமாக பேசினாலும்.. சீன அதிபர், வடகொரியா அதிபர்களை நேரில் சந்தித்து பேசினார். அதனால் அவர் அமைதி பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார்.
5. டாலர் வர்த்தகத்தை மேற்கொள்ளாத நாடுகள் மீது ஆக்சன் எடுக்க வாய்ப்புகள் உள்ளன. பல நாடுகள் டாலர் வர்த்தகத்தில் இருந்து வெளியேறும் நிலையில்.. அதை டிரம்ப் தடுக்கலாம்.
6. தெற்கு சீனா கடலோர பிரச்சனைகள் மீண்டும் ஏற்படும். இதனால் நிலைமை மோசமாகலாம். டிரம்ப் காலத்தில்தான் இங்கே பதற்றம் அதிகரித்தது.
7. டிரம்ப் ரஷ்யாவிற்கு கொஞ்சம் நெருக்கம் என்பதால்.. ரஷ்யாவுடன் கொஞ்சம் நட்பாக செல்லும் வாய்ப்புகள் உள்ளன.
8. இவர் சீனாவிற்கு கடும் எதிரி என்பதால் இந்தியாவுடன் கூடுதல் நெருக்கம் காட்டும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் இந்தியாவிற்கு சாதகமான சர்வதேச அரசியல் சூழல் உருவாகும். முக்கியமாக மோடியுடன் இவருக்கு உள்ள நட்பு முக்கியம்.
9. இஸ்ரேலுக்கு நேரடியாக இவர் தரும் ஆதரவால் ஈரானுக்கு சிக்கல் ஏற்படும். முக்கியமாக ஈரானின் அணு ஆயுத திட்டங்களுக்கு சிக்கல் ஏற்படும்.
மூலம்: ஒன் இந்தியா