உலகளாவிய 50 விண்வெளி நிறுவனங்களில் துருக்கியின் TAI, Baykar இடம்பிடிப்பு!

Date:

துருக்கியின் முன்னணி விண்வெளி உற்பத்தியாளர்களான ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் Baykar ஆகியவை உலகின் சிறந்த 50 விமான நிறுவனங்களுக்குள் இடம் பெற்றுள்ளன.

2023 ஆம் ஆண்டின் உலகளாவிய தரவரிசையில், FlightGlobal  சார்பாக Counterpoint Market Intelligence  ஆல் வெளியிடப்பட்ட பட்டியலில், முக்கிய நிறுவனங்களின் செயல்திறன்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தேர்வு மேற்கொள்ளப்பட்டது.

COVID-19 காலப்பகுதிக்கு பின்  போயிங் மற்றும் ஏர்பஸ் முதலிடங்களை தக்க வைத்துள்ள நிலையில், TAI மற்றும் Baykar ஆகிய துருக்கியின் விண்வெளி நிறுவனங்கள் உலக சந்தையில் தங்களது தாக்கத்தை அதிகரித்து வருகின்றன.

TAI, நிறுவனம் அதன் ANKA III, HÜRJET மற்றும் தேசிய போர் விமானம் KAAN போன்ற முக்கிய திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2.67 டொலர்  பில்லியன் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீடுகள், நட்பு நாடுகளுக்கான ஏற்றுமதிகள் மற்றும் சிவில் விமானத் துறைக்கு வழங்கும் உற்பத்தி வலிமைகளை மேம்படுத்தி உள்ளது.

Baykar நிறுவனம், உலகின் மிகப்பெரிய ட்ரோன் ஏற்றுமதியாளராக திகழ்கிறது. 2023 இல்,  1.8 பில்லியன் டொலர் விற்பனையுடன் தங்களது Bayraktar TB2 மற்றும் Bayraktar AKINCI போன்ற வானுயிர் தளவாட வானூர்திகளுக்கான ஒப்பந்தங்கள் மூலம் பல நாடுகளில் ஆழமான புகழைப் பெற்றுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...