அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் சாம்பியன் கோப்பைக்கான போட்டியில் மூன்று தங்க பதக்கங்களை வென்ற சென்னையைச் சேர்ந்த காசிமா (17) தமிழ்நாடு மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து தான் பெற்ற வெற்றிக் கோப்பையை காட்டி வாழ்த்துப் பெற்றார்.
அமெரிக்காவில் நடைபெற்ற 6-வது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டின் சென்னையை சேர்ந்த காசிமா மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று மாபெரும் சாதனை படைத்து இருக்கிறார்.
மகளிர் தனிநபர், மகளிர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு பிரிவு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார் சென்னை புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வீராங்கனை காசிமா.
அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் காசிமாவுக்கு வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.
அமெரிக்காவில் கேரம் உலக சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இது ஆறாவது உலக சாம்பியன்ஷிப் ஆகும். இதில் காசிமா, நாகஜோதி, மித்ரா, மரிய இருதயம் ஆகிய தமிழக வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இவர்களில் 17 வயதே ஆன காசிமா மூன்று பிரிவுகளில் பங்கேற்றார். மகளிர் தனிநபர், மகளிர் இரட்டையர் மற்றும் மகளிர் குழு பிரிவு என தான் பங்கேற்ற மூன்று பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.