உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!

Date:

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, இலங்கை பாகிஸ்தான் நட்புறவு சங்கம் ஏற்பாட்டில்  இலவச மருத்துவ முகாமொன்று எதிர்வரும் 10ஆம் திகதி மூர்ஸ் இஸ்லாமிய கலாச்சார இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் 

– இரத்த குளுக்கோஸ் சோதனை
– இரத்த அழுத்த பரிசோதனை
– உயரம், எடை, உடல் நிறை குறியீடு (BMI) கணக்கீடு
– மருத்துவர் ஆலோசனை
– இதயத்துடிப்பு பரிசோதனை (ECG)
– கண் பரிசோதனை
– மருத்துவ ஊட்டச்சத்து ஆலோசனை
– பிசியோதெரபி ஆலோசனை

மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த முகாமின் மூலம் நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...