வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் 7 இலட்சத்திற்கும் அதிகமான வெற்று கடவுச்சீட்டுகள் கிடைக்கவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளாந்தம் சுமார் 2000 பேர் கடவுச்சீட்டினை பெற வரிசையில் காத்திருக்கின்றனர். அத்துடன் 1000 பேர் கடவுச்சீட்டிற்கான திகதி வழங்கப்படும் டோக்கனுக்காக நிற்கின்றனர்.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் கும்பல் முன்வரிசைக்குள் நுழைவதற்கு 5000 ரூபா அறவிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மோசடி கும்பல்களின் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குடிவரவு திணைக்களத்திற்கு முன்பாக உருவாகியுள்ள வரிசையில் முன்வரிசை பிடிப்பதற்கு குழுவொன்று 5000 ரூபாவை அறவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது