கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய ‘நானல்ல நீ’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (23) பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது.
களுத்துறை மாவட்ட ஜனாஸா சேவை சங்கம் ஏற்பாட்டில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு கலாபூஷணம் கவிமணி நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்குவார்.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் அவர்களும் சிறப்பு விருந்தினராக சத்திய எழுத்தாளர் எஸ்.ஜி. நாகூர் கனி ஆகியோரும் கலந்துகொள்வர்.
முதல் பிரதியை எழுத்தாளரும் தனியார் கல்வி ஆசிரியையும் தமிழாழி தொலைக்காட்சி துணைச்செயலாளருமான வாசுகி வாசு அவர்கள் பெற்றுக்கொள்வார்.